Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: manual scavenging

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சந்திரயான் விண்கலம் நிலவில் கால் பதித்ததை கொண்டாடும் அதே இந்திய ஒன்றியத்தில்தான், இன்னும் மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி விடப்படும் அவலங்களும் தொடர்கின்றன என்ற கூக்குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.   இந்தியாவில், நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 50 பேர் விஷ வாயு தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த உயிர்பலிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis - NCSK). உண்மையில், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.   ஏனெனில், கழிவுந
சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சேலம்: இதுதான் ஸ்மார்ட் சிட்டியின் லட்சணமா?; தொடரும் மாநகராட்சியின் அலட்சியம்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டாலும், அதற்கான பூர்வாங்க தகுதிகளைக்கூட இன்னும் வளர்த்துக்கொள்ளவில்லை. இன்றும் திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களுக்குள் எந்த வித பாதுகாப்பு கவசங்களுமின்றி மனிதர்களையே இறக்கிவிடும் அவலம் நீடிக்கிறது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என முதன்முதலில் 1993ல் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. பின்னர் அந்த சட்டத்தில் மேலும் சில விதிகள் சேர்க்கப்பட்டு, 2013ல் புதிய சட்டமும் இயற்றப்பட்டது. ஆனாலும், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி இறக்கும் நிகழ்வுகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளன. இதுபோன்ற மரணங்களில் தமிழகத்தின் பாதிப்பு மட்டுமே 44 சதவீதம் என்கிறது ஓர் ஆய்வு.   கடந்த நான்கு ஆண்டுகளில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கி 30 பேர் பலியாகியுள்ளதாக அதிக