Saturday, December 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Mamata Banerjee

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடி வரும் ஏடிஆர் அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பும் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. இந்திய ஒன்றிய அரசில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களைப் பற்றிய ஆய்வு அது. அவர்களின் சொத்துமதிப்பு, அவர்களுக்கு எதிரான வழக்குகள், கல்வித்தகுதி போன்ற அம்சங்களை அவ்விரு அமைப்புகளும் ஆய்வு செய்தன. இன்றைய நிலையில் 25 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அவர்களில் இருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள். ஒருவர், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருடைய சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மற்றொருவர், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு. அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய். மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீத்தர் சிங், 48 கோ
லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை  உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
லவ் ஜிஹாத் பெயரில் ராஜஸ்தானில் ஓர் இளைஞரை ஹிந்து தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் எரித்துக்கொல்லும் வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வு அது. எந்த இடம் என்று குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளங்களில் ரொம்பவே வைரல் ஆகி வருகிறது. ஓர் இளைஞரை, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக கோடாரியால் தாக்குகிறார். கீழே விழுந்த அந்த இளைஞர் கொல்லாதே....காப்பாத்துங்க....என்று கூக்குரலிடுகிறார். கெஞ்சுகிறார். இந்த அபயக்குரல் எதுவுமே அந்த ஹிந்து தீவிரவாத நபரிடம் எடுபடவில்லை. அப்போதும் ஆத்திரம் அடங்காதவராக அவர் ஓர் அரிவாளை எடுத்து வந்து, தரையில் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அந்த இளைஞரை மேலும் வெட்டுகிறார். அடுத்த சில நொடிகளில் அந்த இளைஞரின் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறது. இதையடுத்து உடனடியாக அந்த காட்டு
”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது. நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார். அர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம்
டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு காய்ச்சலை தடுக்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், விரைவில் அரசியல் களம் காண உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். 100 நாள்களில் தேர்தல் வந்தாலும் தான் போட்டியிட தயாராக இருப்பதாகவும், மக்களுக்காக முதல்வர் ஆவதற்கும் தயார் என்றும் கூறியிருந்தார். டுவிட்டர் பக்கத்திலும், ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியிலும், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கமல்ஹாசனை சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து விட்டுச் சென்றார். அரவிந்த் கேஜரிவாலுடனான சந்திப்புக்குப் பின்னர் அ