Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: lily bloom

அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

அல்லி மலர்ந்தது நிலவு வந்ததாலா? அவள் வந்ததாலா?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் இன்று, மற்றுமொரு குறுந்தொகை பாடலைப் பற்றி பார்க்கலாம். ஒரு கவிஞன் என்பவன், எப்போதும் சொற்களால் சரம் தொடுப்பவன். அவன் யாவற்றையும் அகக்கண்களால் காட்சி மொழியாகப் பார்த்து, ரசித்து, முழுமையாக உள்வாங்கிக் கொண்டவன். அதன்பிறகே, கவிஞனிடம் இருந்து சொற்கள் அருவியாக வந்து விழுகின்றன. கவிஞனின் சொற்கள் என்பது சூழலுக்கு ஏற்ப, கணைகளாகவும் சீறும்; பூமாலையாகவும் வந்து விழும். நாம் முன்பே ஒரு தொடரில் குறிப்பிட்டதுபோல், சங்க இலக்கியங்களில் பெண்ணை... பெண்களின் முகத்தை, கூந்தலை, கொங்கைகளை பாடாத புலவர்களே இல்லை. அப்படி பாடாதவன் புலவனே இல்லை. சங்ககாலம் தொட்டே பெண்ணை மலரோடும், மதியோடும் ஒப்புநோக்கி வந்திருக்கிறார்கள். இதில், இப்போதுள்ள 'பொயட்டு'களும் விதிவிலக்கு அல்ல.   புகழேந்தி புலவர், குறுந்தொகையின் கலித்தொடர் காண்டத்தில்,