Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Latha Rajinikanth

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு;  லதா ரஜினிகாந்த் வழக்கு!

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு; லதா ரஜினிகாந்த் வழக்கு!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்புத் திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தபோது, அதை வரவேற்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தால்தான் வருமானம் பாதிக்கப்பட்டதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக அந்தக் கடைக்கு அவர் மாதம் 3,702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், மார்ச் மாதம் முதல் 21,160 ரூபாய் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை
2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?

2000 கோடி ரூபாய் பிஸினஸை இழப்பார்களா ரஜினியும் கமலும்?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெள்ளித்திரைக்கு வெளியே அரசியல் தொடர்பாக ரஜினி எப்போது பேசினாலும், அவர் மீது ரசிகர்கள் சாராத மக்களுக்கு ஒருவித அய்யப்பாடு இதுவரை இருந்து வந்திருக்கிறது. 'எல்லாம் அடுத்த பட புரமோஷனுக்கான வேலைப்பா. படம் ரிலீசாகும்போது இப்படி பேசினாத்தானே கல்லா கட்ட முடியும்...' என்ற விமர்சனங்கள் எழுவது உண்டு. அந்த விமர்சனங்களை நாம் முற்றாக புறந்தள்ளிவிடவும் முடியாது; அதேநேரம் ரஜினியின் சந்தை நிலவரம் அந்தளவுக்கு சரிந்து விட்டதாகவும் கூற முடியாது. இன்றைக்கும் தமிழில் ரஜினியை வைத்து மட்டுமே மிகப்பெரும் பட்ஜெட்டில் படமெடுக்க முடியும் என்று நம்பும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உண்டு. உதாரணம், முன்பு 'எந்திரன்'. இப்போது, '2.0'   ரஜினி ஒரு படத்துக்கு ரூ.55 கோடி ஊதியம் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனின் நிலவரம் அப்படிப்பட்டதன்று. ரஜினியின் ஊதியத்தில் பாதிதான் கமலின் ஊதியம் என்கிறார்கள் விவரம