Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: land

”எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தொட்டால் கை கால் வௌங்காமல் போய்டும்!” –  பூசாரி அருள்வாக்கு; போலீசார் ஓட்டம்!!

”எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை தொட்டால் கை கால் வௌங்காமல் போய்டும்!” – பூசாரி அருள்வாக்கு; போலீசார் ஓட்டம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
சேலம் அருகே, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் குலதெய்வ கோயிலில் படையலிட்டு வேண்டியபொழுது, திடீரென்று அருள் வந்து ஆடிய பூசாரி, 'எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை தொடும் அதிகாரிகளுக்கு கை, கால் வௌங்காமல் போய்டும்.... கண்ணு தெரியாமல் போய்டும்...' என்று அருள்வாக்கு கூறியதால் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் பதற்றத்தில் தெறித்து ஓடினர்.   சேலம் - சென்னை இடையில் எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 36.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழிச்சாலை அமைகிறது. இதற்காக தனியார் பட்டா நிலம் 186 ஹெக்டேர் உள்பட மொத்தம் 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்
நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலை என்றதுமே, நிலத்தை பறிகொடுத்து நேரடியாக பாதிக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசும் நாம், அதிகம் கவனப்படுத்தப்படாத மற்றொரு பெருங்கூட்டமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை மறந்தே போனோம்.   காலங்காலமாக நில உடைமையாளர்களிடம் கூலி வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் என்ற பெரும் சமூகமே இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். 2009களில் உலகமே பொருளாதார மந்தநிலையால் சுருண்டு கிடந்தபோது, இந்திய பொருளாதாரம் கம்பீரமாக நின்றது. அதற்கு சாமானியனின் சேமிப்பும், கிராமப் பொருளாதாரமும் முக்கிய காரணிகளாக இருந்தன.   அத்தகைய வலிமையான கிராமப் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதில், நிலமற்ற கூலித்தொழிலாளர்களின் உழைப்பு அளப்பரியது. எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளருக்கு, வழிகாட்டி மதிப்பில் இருந்து இரண
“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எங்களோட உசுரகூட விட்டுடுவோமே ஒழிய, எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை விட்டுத்தர மாட்டோம்,'' என்று விவசாயிகள் இன்று மீண்டும் போர்க்கொடி உயர்த்தியதால், சட்டப்பூர்வ விசாரணை அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.   சென்னை - சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 248 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஆரம்பத்தில் இருந்தே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக கால் அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சேலம் மாவட்ட வருவாய்த்துறையோ, நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளின் சர்வே எண்களை பத்திரிகைகள் மூலம் அறிவிக்கை வெளியிட்டு, சேட்டிலைட் தொழில்நுட்பத்துடன் நேரடியாக விளை ந
”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

”எங்களை உசுரோட கொளுத்திட்டு நிலத்தை எடுத்துட்டுப் போங்கடா…!”: எட்டு வழிச்சாலை நில அளவீட்டின் கடைசி நாள் பதிவுகள்!!#எட்டு வழிச்சாலை

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
'எடப்பாடி பழனிசாமி மீது சாபம்', 'விஷம் கொடுத்து கொன்று விடுங்கள்', 'உயிரோடு கொளுத்திவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்...' என சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கான நிலம் அளவீட்டுப் பணிகளின் கடைசி நாளான இன்று, பல்வேறு உணர்ச்சிகரமான போராட்டங்களுடன் முடிந்தது.   சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.   சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக பசுமைவழி விரைவுச்சாலை அமைகிறது. 277.3 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலை போடப்படுகிறது.   இதற்காக மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் 159 கிராமங்களில் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 85 சதவீத பரப்பளவு விளைச்சல் நிலங்கள். 100 ஹெக்
பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன், சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர் என்ற நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தமிழக காவல்துறை தனிப்படையினர் மீது கொள்ளை கும்பல் இன்று (டிசம்பர் 13, 2017) துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சென்னை மதுரவாயல் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் (48) சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழக காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் பற்றி நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மா