Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Karnataka assembly election

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு தமிழக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கி
”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கடந்த சில நாள்களாக பழமொழியை மாற்றிப் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்து வந்த ட்விட்டர் புலிகள், 'எடியூரப்பா அரசுதான் ஊழலில் நம்பர்-1' என்று பகிரங்கமாக தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் உளறல்களை இந்தியாவுக்கே இன்று பந்தி வைத்துவிட்டனர். கர்நாடகா மாநிலத்தில், வரும் மே மாதம் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே பாஜக தொழில்நுட்பப் பிரிவுத்தலைவர் அமித் மால்வியா, ட்விட்டரில் தேர்தல் தேதியை வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் பாஜக த