Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: kanthu vatti

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும் சண்முகம் மற்றும் மணி என்ற இருபெரும் கந்துவட்டி மாஃபியாக்களால் சொத்து, சுகங்களை இழந்து நடுத்தெருவில் தத்தளிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 7.2.2019ம் தேதியன்று சென்னையில் தங்களை, விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சங்ககிரி சண்முகம் பிரதர்ஸ் தங்களுடைய, நிலத்தையும் இதர சொத்துகளையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுவதாக ஊடகங்களிடம் குமுறினர். ஆளுங்கட்சியினர்க்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் அதை அப்படியே எல்லா ஊடகங்களும் பிரதிபலித்தன.   ஆனால், சண்முகம் சகோதரர்களின் பேட்டியைப் பார்த்த சங்ககிரிகாரர்களோ தலையில் அடித்து நொந்து கொண்டனர். உள்ள நிலவரம் வேறு; செய்தியாக சொல்லப்படுவதோ வேறு என்பதால் அந்த ஊர் மக்கள் ஊடகங்கள் மீதும் நம்பிக்கையற்றுப் ப
நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை கந்துவட்டி கொடுமையால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய மனைவி, இரு மகள்கள் பரிதாபமாக பலியாயினர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு மதிசரண்யா (4), அக்ஷய சரண்யா (2) என்ற இரு பெண் குழந்தைகள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டன