Tuesday, May 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kannadasan

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

ஊரெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா…! திரை இசையில் வள்ளுவம்! #தொடர்

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களை, வெகுசன ரசிகர்களுக்கு ஏற்ப திரை இசைப் பாடல்களில் குழைத்துத் தருவது என்பது ஒரு நுட்பமான கலை. தமிழ்த் திரைப்படங்களில் 'இளங்கம்பன்' கண்ணதாசன் அதைச் சரிவர செய்தவர் என்பது என் அபிப்ராயம்.   மூத்த கவிஞர்கள் மருதகாசி, வாலி ஆகியோருக்குப் பிறகு வைரமுத்துவும் அவ்வப்போது இலக்கியங்களில் புரண்டு எழுவார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற தொகுப்புகளில் சங்க இலக்கியங்கள் வரிசை கட்டி நின்றாலும் குறுந்தொகை மீது திரைக்கவிஞர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு சற்று அதிகம் உண்டு. தவிர, கம்ப காவியத்தையும், பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் இருந்து திருக்குறளையும் திரை இசையில் வெகுவாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.   அண்மையில், யூடியூபில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. 'நண்பேன்டா (2015)' என்றொரு படம். உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடித்திருந்தனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், 'ஊரெல்லாம் உன்னைக் கண்
முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

முகமென்ன தாமரையா? கை விரல்களென்ன காந்தளா? குழம்பிய தும்பிகள்…மருண்டன விழிகள்!

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
நளன் - தமயந்தி இணையரின் காதல் வாழ்வு பற்றிய பாடல் தொகுப்புதான் நளவெண்பா. என்றாலும், தேனினும் இனிய உவமைகளும், உவமேயங்களும் கொட்டிக்கிடக்கும் சிறப்பு நளவெண்பாவுக்கு உண்டு. புகழேந்தி புலவரின் கற்பனையின் ஆழத்தை ஒவ்வொரு பாடலிலும் உணர்ந்து கொள்ள முடியும். நளவெண்பாவின் கலித்தொடர் காண்டத்தில் கானகத்தில் இயல்பாய் நிகழ்ந்த காட்சியொன்றை தன் கற்பனைத் திறத்தால் சாகாவரம் பெற்ற பாடலாக்கி இருக்கிறான் புகழேந்தி புலவன். அந்தப் பாடல்...   ''மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தை பங்கயம் என்றெண்ணிப் படிவண்டை - செங்கையால் காத்தாளக் கைம்மலரை காந்தளெனப் பாய்தலுமே வேர்த்தாளைக் காணென்றான் வேந்து'' (184)   என்கிறான் புகழேந்தி புலவன்.   கானகத்தில் அழகான, ஒளி வீசக்கூடிய முகம்கொண்ட பெண்ணொருவள், மலர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது
நீ தெய்வம் தந்த அதிசயம்…!

நீ தெய்வம் தந்த அதிசயம்…!

சினிமா, முக்கிய செய்திகள்
(பனை ஓலை)   சில பாடல்கள், சில நிகழ்வுகள் நம்மையும் அத்துடன் ஒன்றச் செய்துவிடும். இளையராஜா, கண்ணதாசன், ஜென்சி ஆகியோரின் கூட்டணி அவர்களின் படைப்புகளுடன் நம்மை அடிக்கடி ஒன்றிப் போகச் செய்யும் மாயாஜாலங்களை அடிக்கடி நிகழ்த்தி இருக்கின்றன. அந்தக் கூட்டணி எப்போதும் வெற்றிக் கூட்டணியாக மட்டுமே அமைந்திருக்கின்றன. அவர்களின் ராஜாங்கத்தை யாரும் சதி செய்து கவிழ்த்து விட முடியாது. எப்போதும் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறார்கள். இவர்களின் கைவண்ணத்தில் உருவானதுதான், 'இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன...' என்ற பாடல். படம், நிறம் மாறாத பூக்கள். 1979 ஆகஸ்ட் 31ல் வெளியானது.   பாரதிராஜாவின் நாயகிகள் எப்போதும் வெள்ளை உடை அணிந்த தேவதைகள். இந்தப் பாடலிலும் ராதிகா, வெள்ளுடை தேவதையாக பனிச்சிற்பம்போல் (பனிச்சிற்பம் என வேறு ஒருவரை வர்ணித்து விட்டேன்.
திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
தேனினும் இனிய குறள் அமுதத்தை, திரை இசையில் நயம்பட, எல்லோரையும் ஈர்க்கும்படி செய்வதன் நம் இளங்கம்பன் கவியரசர் கண்ணதாசன். 'குந்தித் தின்றால் குன்றும் கரையும்' என்பது முதுமொழி. அதுபோல், 'ஆடம்பரம், அழிவையே தரும்' என்பது சான்றோர் அனுபவ மொழி.     வெட்டி பந்தா குடும்பத்திற்கு ஆகாது என்பதை நகைச்சுவையுடன், தனக்கே உரிய மேதைமைத் தனத்துடன் 'பாமா விஜயம்' படத்தில் சொல்லி இருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். 24.2.1967ல் வெளியான 'பாமா விஜயம்' படத்தின் ஒரு வரி கதை ரொம்பவே எளிமையானது.     ஊரே கொண்டாடும் திரைப்பட நடிகை பாமா, அவருடைய குடியிருப்பு அருகில் கூட்டுக்குடும்பமாக வாழும் தனது ரசிகர்களின் வீட்டிற்கு ஒரு நாள் விஜயம் செய்கிறாள். அவளுடைய வருகைக்காக, நடுத்தர வரக்கத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள், சக்திக்கு மீறி கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த சோஃபா, கட்டில் ம
திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

இலக்கியம், சினிமா, முக்கிய செய்திகள்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,' போலருக்கு. காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், 'பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ' என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு. ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு,