Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: kamalapuram airport

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் வானூர்தி சேவை நாளை (மே 27, புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. பயண நேரத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   ஊரடங்கு:   கொரோனா வைரஸ் பரவல் அபாயம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை நான்கு கட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   நோய்ப்பரவல் அபாயம் மட்டுமின்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் பேருந்து, ரயில், வானூர்தி சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொது போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சேலம் காமலாபுரம் வானூர்தி நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ட்ரூஜெட் வானூர்தி சேவையும் நிறுத்தப்பட்டத
வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (செப்டம்பர் 11, 2018) கூறினார்.   முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் சேலம் வந்தார். வழக்கமாக வார இறுதி நாளாக பார்த்து நிகழ்ச்சிகளை திட்டமிட்டு சேலத்திற்கு வருகை தரும் முதல்வர், இந்தமுறை வாரத்தின் துவக்கத்திலேயே வந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசுதான் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசின் நிதி நெருக்கடி காரணமாக, எரிபொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்திட முடியாது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடந்தது என்பதை வைத்து மட்டுமே அவரை குற்றவாளி என்று சொல்லி விட முட
”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

”அரசாங்கத்தை தனியாரிடம் விற்றுவிடுங்கள்!”- சீமான் ஆவேசம்

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
எல்லா துறைகளிலும் தனியார்தான் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றால் அரசாங்கம் எதற்கு? அதையும் தனியாருக்கு ஏலம் விட்டுவிட வேண்டியதுதானே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறினார்.   சேலம் மாவட்டம் காமலாபுத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்கனம்பட்டி, சட்டூர், பொட்டியபுரம், தும்பிப்பாடி ஆகிய கிராமங்களில் 570 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.   இதற்கு அந்த கிராமங்கங்களைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தவிர, சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்காகவும் சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நி