Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kajal Agarwal

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ
இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள். இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை
அஜித்தின் ‘விவேகம்’ வசூல்  எவ்வளவு?

அஜித்தின் ‘விவேகம்’ வசூல் எவ்வளவு?

தமிழ்நாடு
அஜித்குமார் நடிப்பில் கடந்த 24ம் தேதி 'விவேகம்' படம் வெளியானது. 'வேதாளம்' படத்தை அடுத்து, இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்தப்படம் வெளியாகிறது என்பதால், ரிலீசுக்கு முன்பே 'தல' ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தப்படம் 770 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது. காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் என நட்சத்திர அந்தஸ்து இருந்ததால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விவேகம் ஆரம்பத்திலேயே ரூ.120 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழில் ஜேம்ஸ்பாண்டு வகையறா பாத்திரங்களில் நடிக்க அஜித்குமாரை விட்டால் வேறு ஆளில்லை என்ற ரீதியில் நேர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. 'தல' ரசிகர்களை பெரிய அளவில் விவேகம் திருப்தி படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், 'வ
‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

‘விவேகம்’ விமர்சனம் – ‘மாஸ் லெவல்’!

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (24/8/17) வெளியாகி இருக்கிறது 'விவேகம்'. நடிப்பு: அஜித்குமார், காஜல் அகர்வால், அக்ஷராஹாஸன், விவேக் ஓபராய், கருணாகரன். இசை: அனிருத். இயக்கம்: 'சிறுத்தை' சிவா. சர்வதேச உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஏகே என்ற அஜெய்குமார் என்ற அஜித்குமார். வழக்கம்போல் அவருடைய குழுவில் நான்கு போலீஸ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆர்யன் என்ற விவேக் ஓபராய். இந்தியாவில் சர்வதேச தீவிரவாதிகள் மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த அணு குண்டுகளை வைத்து விடுகின்றனர். அவற்றில் ஒரு குண்டு வெடித்து, நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். மீதம் உள்ள இரண்டு குண்டுகளையும் வெற்றிகரமாக அகற்றினாரா? கர்ப்பிணியாக இருக்கும் தன் காதல் மனைவி காஜல் அகர்வாலை வில்லன் கும்பலிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதை விவரிக்கிறது, 'விவேகம்'. இதன் பிறகு, இந்தியாவில் இருந்து செர்பியா நாட்டிற்கு