Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Kaala

அரசியலுக்கு வர தயங்குவது ஏன்?; ரஜினி விளக்கம்!

அரசியலுக்கு வர தயங்குவது ஏன்?; ரஜினி விளக்கம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக இன்று (டிசம்பர் 26, 2017) கூறினார். ரசிகர்களுடனான புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், கடந்த மே மாதம் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, “நம்மை யார் விமர்சித்தாலும் அதைக்கண்டு அஞ்சாதீர்கள். எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும். தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறா? போருக்கு தயாராக இருங்கள்” என்றார். தேர்தலைத் தான் அவர் போர் என்ற குறியீடு மூலம் உணர்த்தியதாகவும், நிச்சயமாக அவர் அரசியலில் நுழைவது உறுதியாகவிட்டது என்றும் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ரஜினி அரசியல் விவகாரம்: ட்விட்டரில் கிழித்து தோரணம் விடும் நெட்டிசன்கள்!

ரஜினி அரசியல் விவகாரம்: ட்விட்டரில் கிழித்து தோரணம் விடும் நெட்டிசன்கள்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''அரசியல் களத்தில் இறங்குவதற்கு இப்போது அவசரம் இல்லை,'' என்று ரஜினிகாந்த் திடீரென்று கூறியுள்ளதை கிண்டலடித்து நெட்டிஸன்கள் ட்விட்டரில் கேலி, கிண்டல் செய்து விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். கடந்த மே மாதம், தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், ''போர் வரட்டும். அப்போது பார்த்துக்கலாம். அதுவரை காத்திருங்கள்'' என்ற குறியீட்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அரசியல் நெருப்பை பற்ற வைத்தார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட ரஜினிகாந்த், அரசியல் களம் காண்பது உறுதியாகி விட்டதாகவே அவருடைய ரசிகர்கள் கருதினர். அவருடைய பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி, இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்புகளும் நிலவி வந்தது. அண்மையில் ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் சென்ற ரஜினிகாந்த், அங்கு சாமி தரிசனம் செய்தார். ராகவேந்திரர் தரிசனம் முடிந
ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நதிகள் இணைப்புக்காக வீடியோவில் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்னைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். தமிழக அரசியல் களத்தை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இரண்டு காலக்கட்டங்களாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களிடம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர் மறைந்தபோதுகூட, அடுத்தது யார்? என்பதில் நீண்ட குழப்பங்கள் ஏற்படவில்லை. வி.என்.ஜானகியை ஆதரித்தவர்கள்கூட விரைவிலேயே ஜெயலலிதா அணியில் இணைந்து கொண்டனர். இப்போதைய நிலை அப்படி இல்லை. அடுத்து யாரெல்லாம் அரசியல் களத்திற்கு வரலாம் என்ற பட்டியல் போட்டால் அதிலும் சினிமாக்காரர்களே முதல் வரிசையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விஷால், சூர்யா இப்படி நீள்கிறது பட்டியல். 100 படங்களைக் கடந்த முன்னணி