Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Jayalalithaa death

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

ரஜினி நாய் கூட எம்எல்ஏ ஆகிவிடும்!: அன்புமணி ராமதாஸ் தாக்கு

அரசியல், அரியலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தின் பால்தாக்கரே போல செயல்பட்டு வரும் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அவருடைய மகன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சினிமாக்காரர்கள் மீதும் குறிப்பாக ரஜினிகாந்த் மீதும் கடும் விமர்சனங்களை முன்னெடுத்து வருகின்றனர். ரஜினியின் தயாரிப்பில் பாபா படம் வெளியானபோது, ரஜினியின் மீதான பாமக பாய்ச்சல் உச்சக்கட்டத்தில் இருந்தது. பல திரைமறைவு சமரசங்களுக்குப் பிறகு, பாபா படப்பிரச்னை முடிவுக்கு வந்தது. ஆனாலும், ஒட்டுமொத்தமாகவே சினிமாக்காரர்கள் மீதும், அந்த துறை மீதான தாக்குதல் போக்கையும் பாமக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் இயல்பாகவே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனம் கவர்ந்த தலைவர்கள் இல்லாத நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்களுடைய அரசியல் ஆசைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். கடந்த மே மாதம்
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமா?; விசாரணை ஆணையத்திடம் சொல்லலாம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள தகவல்களை எழுத்து மூலமாக வரும் 30ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப். 22ம் தேதி, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் வேறு சிலரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். கடந்த செப்டம்பர் 25ம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அ
அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''ஜெயலலிதா, சிகிச்சையில் இருந்தபோது இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,'' என்று ரைமிங் ஆக வசனம் பேசி அதிமுகவில் திடீரென்று குழப்ப வெடிகளை கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இத்தகைய பேச்சை அப்போது கட்சிக்குள் யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசனிடமே தனது அதிருப்தியை நேரிடையாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, உட்கட்சி பூசலால் ஏற்பட்ட சலசலப்புகளால் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி அணியில் அங்கம் வகிக்கிறார். தீர்க்கமான விசாரணை என்று வரும்போது, திண்டுக்கல் சீனிவாசனின் இ
ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற 'சசிகலா அன்டு கோ' கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது. ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முட