Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Jandhan

பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு திட்ட அறிவிப்பின்போதும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாகக் கூறுவதும், ஆய்வு முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருப்பதைக் காண முடிகிறது. உலக உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் பட்டினியில்லா நாட்டை உருவாக்குதல், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் ஊட்டச்சத்து, குழந்தைகள் நலம், பட்டினி குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் 119 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. புள்ளிகள் அடிப்படையில் நாடுகளின் தகுதி பட்டியலை வரிசைப்படுத்துகிறது. அந்த ஆய்வில், பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 100வது இடமே கிடைத்துள்ளது. இந்தியா, வெறு
நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல