Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: investigation

பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன், சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர் என்ற நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தமிழக காவல்துறை தனிப்படையினர் மீது கொள்ளை கும்பல் இன்று (டிசம்பர் 13, 2017) துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சென்னை மதுரவாயல் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் (48) சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழக காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் பற்றி நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மா
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு!!

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு!!

இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து, திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 12, 2017) பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா (19). இருவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருதரப்பு பெற்றோரையும் எதிர்த்து அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆணவப்படுகொலை செய்ய கவுசல்யாவின் தந்தை திட்டம் தீட்டினார். கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி, உடுமலைப்பேட்டை பேருந்த
மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுஸ்ல்ஸே இடியாப்பம் போலத்தான் சுருண்டு கிடக்கும். அதற்குத்தான் இப்போது மீண்டும் இடியாப்ப சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது. நம்ம ஊர்களில் குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இரண்டே நிமிடங்களில் சமையல் வேலை முடிகிறது எனில் நிச்சயம் அவர்கள் வீட்டில் அன்றைய தினம், நூடுல்ஸ்தான் முக்கிய உணவாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் ஒருமுறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸில் அதிர்ச்சிகரமான பல ரசாயனங்கள் சுவைக்காக சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபோன்ற துரித உணவுகளில் 0.01 முதல் 2.5 பிபிஎம் வரை மட்டுமே காரீயம் சேர்க்கப்பட வேண்டும். இது ஒருவகையான செ
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.