Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: industry

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்திற்கு மூடுவிழா?

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை மூடிவிடும் திட்டத்தில் இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. உப்பு முதல் சாப்ட்வேர் வரை 100க்கும் மேற்பட்ட தொழில்துறைகளைக் கொண்டது டாடா குழுமம். இந்தக் குழுமத்தின் டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட 29 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக கடந்த சில ஆண்டாகவே டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) நிறுவனம் கடும் நெருக்கடியில் தவித்து வருகிறது. சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருப்பதாக கூறப்படுகிறது. மறுகட்டமைப்புக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், 5000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசி வருகிறது. இது தொடர்பாக டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது, ''டாடா
துணிச்சலின் முகவரி  மீனாட்சி!

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

சென்னை, மகளிர், மதுரை, வேலூர்
''தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்" "இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்," என்கிறார், மீனாட்சி விஜயகுமார். தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர். துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வர