Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Indian Railway

ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

ஐஆர்எப்சி ஐபிஓ நாளை வெளியீடு; 178 கோடி பங்குகள் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க முடிவு!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ஐஆர்எப்சி (IRFC) நிறுவனத்தின் ஐபிஓ (IPO), நாளை (ஜன. 18, 2021) பங்குச்சந்தைகளில் வெளியிடப்படுகிறது. பொதுத்துறைக்குச் சொந்தமான, வங்கி அல்லாத நிதிச்சேவை நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதும், இதுதான் வரலாற்றில் முதன்முறை.   ஐஆர்எப்சி:   இந்திய ரயில்வே நிதி கழகம் எனப்படும் இண்டியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் (ஐஆர்எப்சி), ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.   ஐபிஓ வெளியீட்டின் மூலம் 4633 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. ஐபிஓவில் ஒரு பங்கின் விலை 25 - 26 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச விலையின் அடிப்படையில் பங்குகள் விற்பனை செய்யப்படும்.   178.2 கோடி பங்குகள்:   ஐஆர்எப்சி நிறுவனத்தின் 1
இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்;  ரயில்வே திட்டம்

இனி முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றலாம்; ரயில்வே திட்டம்

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்த ஒருவர், தவிர்க்க இயலாத நிலையில் பயணத்தை ரத்து செய்ய நேர்ந்தால், அந்த டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்றிக்கொள்ளும் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே நிர்வாகம் விரைவில் அமல்படுத்த உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வரும் ரயில்வே, காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை அமல்படுத்தி வருகிறது. ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது என்பது இதுவரை குற்றமாக கருதப்பட்டு வந்த நிலையில், அதை நிர்வாகமே அனுமதிக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. இவ்வாறு மாற்றித்தரப்படும் டிக்கெட்டுக்கு, அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரே ஒப்புதல் வழங்கலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதலாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, அரசு ஊழியர் ஒருவர் திட்டமிட்டபடி பயணம் செய்ய இயலாமல்,