Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: imprisonment

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய 'பிரேக்கிங் நியூஸ்' ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான். 'இடத்தைக் கொடுத்தா
பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான். ஆனால், தாமத