Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ICDS

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

அங்கன்வாடி குழந்தைகளுக்கு பூச்சி சாம்பார்; வண்டு பொரியல்! அலட்சியம் யார் பக்கம்?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் அங்கன்வாடி மையத்தில் பூச்சி, வண்டுகளால் செல்லரித்துப்போன தானியங்களால் குழந்தைகளுக்கு உணவு சமைத்துப்போடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் மாவட்டத்தில் மொத்தம் 2696 அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு முதல் மூன்று வயது வரையிலான 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு திங்கள், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் வழக்கமான கலவை சாதத்துடன், முட்டையும் வழங்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் உணவும், மூக்குக்கடலை சுண்டலும், வெள்ளிக்கிழமைகளில் பச்சைப்பயறு சுண்டலும் வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என நம் சோர்ஸ்கள் தரப்பில் சொல்லப்பட, ஒரு பானை சோற்றுக்கு பதம் கணக்காக, சேலம் குமாரசாமிப்பட்டியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்குச் சென்றோம். 15 அடி அகலம், 25 அடி நீளம் கொண்ட ஒரே அறை. மொத்தம் 15 குழந்தைகள