Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Hinduism

தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

தமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கந்த சஷ்டி கவசத்திற்கு  கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் பொழிப்புரை ஒருபுறம்; கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டு உள்ளது, மற்றொருபுறம். பெரியார் சிலை அவமதிப்பு என்பது, கருப்பர் கூட்டத்தின் செயலுக்கு எதிர்வினையாகவே கருத முடியும்.   தமிழர் நாகரிகம், ஆரியப் பார்ப்பனர் படையெடுப்புக்குப் பின்னர் பெருமளவில் சிதிலமடைந்து இருக்கிறது. இப்போதுள்ள தமிழர்கள், முற்றாக ஆரிய டிஎன்ஏ ஆகவும் இல்லாமல், பழந்தமிழரின் டிஎன்ஏ ஆகவும் இல்லாமல் புதிய மூலக்கூறுகளுடன் இருக்கிறார்கள். சோறு என்பது சாதம் ஆனபோதே தமிழர்கள் ஆரியத்தின்பால் மூழ்கி விட்டார்கள் என்பதாக புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அவர்களுக்கு தமிழ்க்கடவுள் முருகன் யார்? ஆரியக்கடவுளான ஸ்கந்தன் (கந்தன்), சுப்ரமணியஸ்வாமி யார் என்பதில் எல்லாம் பெருங்குழப்பம் காணப்படுகிறது.   உ
மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஐ.நா. மன்றத்தில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டு வருவதில் முனைப்பு காட்டும் பாஜக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்குவதிலும், மாநில உரிமைகளை பறிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய அளவில் மொழிக்காக புரட்சி வெடித்தது என்றால், அந்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்தும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்ததில் திராவிட இயக்கங்களுக்கு பெரும்பங்கு உண்டு. 1963 மற்றும் 1965களில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தது. ஆயினும், இந்தப் போராட்டம் திடீரென்று உருவெடுத்து இல்லை. இப்போராட்டங்களுக்கான விதை 1937லேயே விதைக்கப்பட்டு விட்டது. ஹிந்திக்கு எதிராக அப்போது துவங்கியதுதான் முதல் போராட்டம். தற்போது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, தொடக்கத்தில் இருந்தே மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறத
மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதார், ரேஷன் மானியம் ரத்து என் பாஜக அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி உள்ளனர். பாகிஸ்தான் ஊடுருவலை முறியடிக்க இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறதோ இல்லையோ, சொந்த நாட்டினர் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை விதித்தது. இதனால் நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு. இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி,