Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: health insurance

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்
தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

தமிழக பட்ஜெட் தாக்கல்: கடன் சுமை 5.70 லட்சம் கோடியாக உயரும்!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கை, சட்டப்பேரவையில் செவ்வாயன்று (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் கடன் சுமை, அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.   தமிழக சட்டப்பேரவையில், 2021-2022ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட், செவ்வாய்க்கிழமை (பிப். 23) தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். விரைவில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.   நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:   தமிழக அரசின் நிதி பற்றாக்குறை மாநில அரசின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2021-2022ம் நிதியாண்டில் 4 சதவீதத்திற்குள்ளும், 2022-2023ம் நிதியாண்டில் 3.5 சதவீதத்திற்குள்ளும்,