Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: gopalapuram

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்
டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

டெங்கு காய்ச்சலை ஒழிக்காத அரசு அகல வேண்டும்: கமல்ஹாசன் ஆவேசம்

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டெங்கு காய்ச்சலை தடுக்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன், விரைவில் அரசியல் களம் காண உள்ளதாகவும், தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார். 100 நாள்களில் தேர்தல் வந்தாலும் தான் போட்டியிட தயாராக இருப்பதாகவும், மக்களுக்காக முதல்வர் ஆவதற்கும் தயார் என்றும் கூறியிருந்தார். டுவிட்டர் பக்கத்திலும், ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியிலும், தற்போதுள்ள அதிமுக அரசுக்கு எதிராக அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்தார். சில நாள்களுக்கு முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், கமல்ஹாசனை சென்னைக்கு நேரில் வந்து சந்தித்து விட்டுச் சென்றார். அரவிந்த் கேஜரிவாலுடனான சந்திப்புக்குப் பின்னர் அ