Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: good judgment

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று விவசாயி அருள்வாக்கு கூறினார்.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 36.3 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலை வழித்தடம் அமைகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் நிலத்தை விட்டுத்தர மறுப்பதுடன், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.   மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் குலதெய்வமான பெரியாண்