Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: goat breeders

தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத ஒரு வர்க்கத்தினரின் வாழ்வியலும், அவர்களின் காதலையும் மண் மணத்துடன் சுமந்து வந்திருக்கிறது, 'தொரட்டி'.   கிராமங்களில் வழமையான சொல்வழக்கு ஒன்று உண்டு. நற்குடியில் பிறந்த ஒருவர் திடீரென்று தீய வழியில் சென்று சீரழிகையில், 'அவன் என்ன பண்ணுவான் பாவம்....சேருவரிசை சரியில்ல...' என்பார்கள். அப்படி கூடா நட்பால் கேடாய் முடிந்த இளைஞனை விரும்பி மணக்கும் அவனுடைய மனைவி, கணவனை திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்தினானா? எப்படியும் திருத்திவிடலாம் என நம்பி வந்த அவளுக்கு நேர்ந்தது என்ன? கணவனின் சேக்காலிகளுக்கு என்ன நடந்தது? என்பதை காதல், நட்பு, துரோகம், வன்மம் கலந்து, கிராமிய அழகியலுடன் பேசுகிறது, தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டம்தான் கதைக்களம். 1980களில் கதை நகர்கிறது. அறுவடை முடிந்த பிறகு விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பழக்கம், நெல்லை, ராமநாதப