Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: General Secretary

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

ஓபிஎஸ்ஸை கழற்றிவிட ஆழம் பார்க்கிறாரா இபிஎஸ்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''எனக்குப் பின்னாலும் அதிமுக என்ற இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நலனுக்காகவே செயல்படும்,'' என்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இப்படி அவர் சட்டப்பேரவையிலேயே முழங்கினார். எந்த இயக்கம் மக்கள் நலனுக்காக செயல்படும் என்று சொன்னாரோ, அந்த இயக்கம்தான் சில காலம் கூவத்தூர் விடுதியிலும், புதுச்சேரி விடுதியிலும், கல்லறையிலும் முடங்கிக் கிடந்தது. அடுத்த தேர்தல் வரையிலாவது அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியான நிலையில் இருக்கிறது. அதிமுகவை மீட்டெடுக்க ஜெயலலிதா, ஏசு கிறிஸ்து போல மீண்டும் உயிர்த்தெழுந்துதான் வர வேண்டும். அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஜெயலலிதா இருக்கும்வரை அவர் முன்பாக எப்படி கூனிக்குறுகி நின்றார்களோ அதே அடிமை மனோபாவத்தை சசிகலாவிடமும் காட்டி வந்தார்கள். ஆனால், பாஜக என்ற புதிய கூட்டாளி கிடைத்த பின்னர் அவர்களின் போக்கு அடியோடு மாறி
ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்!

ஆர்கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ல் இடைத்தேர்தல்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று (நவம்பர் 24, 2017) அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்கே நகர் (டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவில் உள்கட்சி பூசல்கள் உச்சத்தில் இருந்த நிலையில், அதிமுக எ
ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற 'சசிகலா அன்டு கோ' கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது. ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முட
ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர்கள் பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாது எனில், ரிசார்ட்டில் தங்கியுள்ள குதிரைபேர எம்எல்ஏக்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலாமா? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக உள்கட்சி பூசல்களால் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்தும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நல்லதொரு மாற்றம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். 'டுவிட்டர் அரசியல்வாதி' என்று ஆளும் தரப்பும், பாஜகவும் கமல்ஹாசனை கிண்டல் அடித்தாலும், 'டுவிட்டரும் போராட்ட களம்தான்' என்று சளைக்காமல் பதிலடி கொடுத்தார். சமகால அரசியல் நகர்வுகள், சமூக பிரச்னைகள் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது, அ
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 12) நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களின்போது மேடையில் ஜெயலலிதா, அவைத்தலைவர் ஆகியோருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டு இருக்கும். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவருடைய முக்கிய ஆதரவாளர்களுக்கும் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.   பொதுக்குழு நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட், பேனர்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் புகைப்படங்கள் இருந்தன. முன்பு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே பேனர்களில் இருக்கும். இன்றைய பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியனம் ரத்த
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட
எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. அக்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளனர். தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியினை பறித்து வருகிறார். அதற்கு பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். திருச்சி. எம்.பி. குமார், தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என தினகரனுக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ப