Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: general body

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அதிமுக: முடிவுக்கு வருகிறது மன்னார்குடி ராஜ்ஜியம்?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அதிரடிகளால் அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி கும்பலின் ராஜ்ஜியம் கூண்டோடு முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நாளன்று தொடங்கிய 'பிரேக்கிங் நியூஸ்' ஜுரம், இன்னும் தமிழக மின்னணு ஊடகங்களை விட்டு அகலவே இல்லை. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல்கள் குறித்த செய்திகள்தான் ஒட்டுமொத்த ஊடகங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. நிரந்தர முதல்வர், நிரந்தர பொதுச்செயலாளர் என உச்சாணிக் கொம்பிலேயே ஜெயலலிதாவை வைத்து அழகு பார்த்த ரத்தத்தின் ரத்தங்கள்தான், அவர் மறைந்த பின்னர் சசிகலாவை 'சின்னம்மா' என்று வாஞ்சையோடு அழைத்தனர். அதிமுகவை காக்கும் ஒரே ரட்சகர் அவர்தான் என்று, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும் இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்¢ளிட்ட விசுவாசிகள்தான். 'இடத்தைக் கொடுத்தா
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 12) நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களின்போது மேடையில் ஜெயலலிதா, அவைத்தலைவர் ஆகியோருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டு இருக்கும். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவருடைய முக்கிய ஆதரவாளர்களுக்கும் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.   பொதுக்குழு நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட், பேனர்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் புகைப்படங்கள் இருந்தன. முன்பு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே பேனர்களில் இருக்கும். இன்றைய பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியனம் ரத்த
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட