Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: gaming players

ஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்!: அப்புறம் உங்க இஷ்டம்

ஸ்மார்ட்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால் மகிழ்ச்சி குறையும்!: அப்புறம் உங்க இஷ்டம்

இந்தியா, உலகம், தகவல், முக்கிய செய்திகள்
ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் போதும் உலகமே கையில் வந்துவிட்டது போன்ற உணர்வு கிட்டிவிட்டது என்னவோ உண்மைதான். ஓர் அறைக்குள் அமர்ந்தவாறே உலகை அளந்து விடலாம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் ஆளுக்கொரு ஸ்மார்ட் ஃபோனை கையில் வைத்துக்கொண்டு அவரவர் உலகத்தில் தனியே லயித்து கிடப்பது கண்கூடு. ஆனால், ஸ்மார்ட் ஃபோன்களை அதிகமாக பயன்படுத்தும்போது மனிதர்களின் இயல்பு மாறுவதோடு, மகிழ்ச்சியும் குறைகிறது என்கிறது ஓர் ஆய்வு. சர்வே எடுப்பதில் புகழ்பெற்ற அமெரிக்காதான் இதைப்பற்றியும் ஓர் ஆய்வை அண்மையில் மேற்கொண்டது. அந்த நாட்டில் உள்ள ஏதோ ஓர் அமைப்புன்னு வெச்சுங்குங்களேன். அந்த அமைப்பு, சில லட்சம் பேரிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறது. ஆய்வுக்கு உட்பட்ட எல்லோருமே 13 முதல் 19 வயது வரையுள்ள பதின்பருவத்தினர். ஆண், பெண் இருபாலரும் அடக்கம். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம், மொபைல், டேப்லெட், கணி