Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Freedom

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைக
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப