Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: fire

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 6140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று (டிசம்பர் 28, 2017) வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலர் நிலையிலான 5538 (ஆண் 3877, பெண் 1661) பணியிடங்களும், சிறைத்துறையில் 365 (ஆண் 319, பெண் 46) பணியிடங்களும் காலியாக உள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 237 தீயணைப்போர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சலுகைகள் இப்பணியிடங்களுக்கும் பொருந்தும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் திருநங்கைகளும்
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்:  கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

அரசை விமர்சித்து கேலிச்சித்திரம்: கார்ட்டூனிஸ்ட் பாலா கைது!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
நெல்லை தீக்குளிப்பு நிகழ்வை சித்தரிக்கும் விதமாக முதல்வர், நெல்லை ஆட்சியர், காவல்துறை ஆணையர் ஆகியோரை கேலிச்சித்திரமாக வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் இன்று (நவம்பர் 5, 2017) கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர், காவல்துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் தனது மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமைக்கு ஒரு குடும்பமே பரிதாபமாக பலியானது குறித்து சென்னை கோவூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது லைன்ஸ் மீடியா இணையதளத்தில் ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டு இருந்தார். அத்துடன் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தார்.
நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை கந்துவட்டி கொடுமையால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய மனைவி, இரு மகள்கள் பரிதாபமாக பலியாயினர். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு மதிசரண்யா (4), அக்ஷய சரண்யா (2) என்ற இரு பெண் குழந்தைகள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டன