Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: female photographer

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

பெண்ணுக்கு பாதுகாப்பான தேசமா இந்தியா?

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய உயர்நீதிமன்றங்களில் மட்டும் 137458 பாலியல் வல்லுறவு வழக்குகள் இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் விசாரணைகளால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்காமல் போகக்கூடும். இதன் தீவிரம் தெரியாமல் இந்திய நீதிமன்றங்களும், அரசும் பரிபாலனம் நடத்துவது, இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. தேரா சச்சா சவுதா ஆசிரம பெண் சீடர்கள் இருவரை, அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் பாலியல் வல்லுறவு செய்ததாக 2002ல் புகார் பதிவு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்தே தண்டனை கிடைத்திருக்கிறது. தாமதமான நீதி என்றாலும், பசுத்தோல் போர்த்திய சாமியார்களுக்கு சரியான சவுக்கடியாகத்தான் இந்த தண்டனை அமைந்திருக்கிறது. 20 ஆண்டுகள் சிறை, நிச்சயம் கடுமையான தண்டனைதான். ஆனால், தாமத