Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: fake encounter

ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு, என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் நாடகம் ஆடுவதாக உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல், கடந்த மே 2, 2019ம் தேதியன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது. ஒரு கொலை வழக்கில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனால் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவும் சொன்னது காவல்துறை.     கதிர்வேல் மீது ஏற்கனவே மூன்று கொலை, ஒன்பது வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அவர் தானாகவே காவல்துறையில் சரணடைந்த நிலையில், திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட
சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர், வியாழக்கிழமை (மே 2, 2019) காலையில் நடந்த எதிர்மோதல் (என்கவுண்டர்) தாக்குதலில் சுட்டுக்கொன்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலோ என்னவோ, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் குற்றவாளிகள், பிணையில் வெளியே சுற்றும் ரவுடிகளின் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று அறிவுரைகளும், மென்மையான எச்சரிக்கையும் வழங்கினர்.   இது ஒருபுறம் நடந்தாலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்தல், குண்டர் சட்டத்தில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். மாநிலத்தில் வேறு எ
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற