Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: eradication

தேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி! கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!!

தேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி! கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!!

சிறப்பு கட்டுரைகள், புதுக்கோட்டை, முக்கிய செய்திகள்
காலம் காலமாக சனாதன சடங்குகளின் பெயராலும், மூடநம்பிக்கைகளாலும் விலங்கிடப்பட்டு, இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண் குலத்தில் இருந்து தீக்குழம்பாய் பீறிட்டு வந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.   ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த எல்லா அவைகளிலும் நுழைந்து தன்னை நிரூபித்து, மற்ற பெண்களுக்கும் இன்றளவும் நிரந்தர முன்மாதிரியாக நிலைத்துவிட்டவர், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. காலத்தை விஞ்சிய அவருடைய சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று, தேவதாசி முறை ஒழிப்பைச் சொல்லலாம். இன்று அவருடைய 133வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கூகுள் நிறுவனம் 'டூடுல்' வெளியிட்டு கவுரப்படுத்தி இருக்கிறது. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவாக மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, அவருடைய பிறந்த நாளை, 'மருத்துவமனை தினமாக' கொண்டாடப்படும்
டெங்கு அலட்சியம்:  சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை