Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: environmental science

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப