Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Entrepreneur

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37).   கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று.   அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   சேலம் மாவட்ட
‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்
தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தகவல், முக்கிய செய்திகள்
'நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   இத்திட்டத்தில் கடனுதவி பெற, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு மட்டும் அதி