Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: entire curfew

கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் மாநகர பகுதிகளில் மட்டும் இன்று (ஏப். 26) முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்கமாக வெளியிட்டுள்ளது.   ஆரம்பத்தில் சளி, இருமல், தொண்டையில் வலி, மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாக இருந்து வந்த நிலையில், அண்மைய முடிவுகளில் இந்த அறிகுறிகள் இல்லாதோருக்கும் நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறதோ என்ற மருத்துவத்துறையினரின் அய்யம் காரணமாகவே, ஊரடங்கை மேலும் கடுமையாக்கி பரவலாக முழு ஊரடங்காக அமல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏப். 25, 26 ஆகிய இரு நாள்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு