Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: employment

”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

”பிரபாகரன் உடலைப் பார்த்து வேதனை அடைந்தேன்” – சொல்கிறார் ராகுல்காந்தி

இந்தியா, உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உடலைப் பார்த்து நானும், பிரியங்காவும் மிகவும் வேதனை அடைந்தோம் என்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் குஜராத்தில் இப்போதே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (9/10/17) அந்த மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, வதோதராவில் தொழில் அதிபர்களைச் சந்தித்து உரையாடினார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அவரும் சகஜமாக அவற்றுக்கு பதில் அளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பாஜக அரசு மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. நம் நாட்டில் தினமும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வெளிய
நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல
அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிலையங்கள் சங்கம் (டான்சீன் - TANCEAN-Tamilnadu Catholic Educational Association ), தமிழ்வழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சில யோசனைகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ், தமிழகம், புதுவையில் 2630 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. டான்சீன் கல்வியாளர்கள் கூட்டம் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுவையில் நடந்தது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கிய அம்சங்கள்: தமிழ்வழிப் பள்ளிகளின் இன்றைய நிலை: பொதுமக்களிடையே ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது பெருமை என மக்கள் எண்ணுகிறார்கள். மிகவும் ஏழை குழந்தைகளின் தேர்வாக மட