Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DRO Sukumar

பெயரளவுக்கு நடந்த எட்டுவழிச்சாலை விசாரணை!; மக்கள் எதிர்ப்பு முழக்கம்; அதிகாரிகள் டென்ஷன்!!

பெயரளவுக்கு நடந்த எட்டுவழிச்சாலை விசாரணை!; மக்கள் எதிர்ப்பு முழக்கம்; அதிகாரிகள் டென்ஷன்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக, சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து ஏற்கனவே ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டு இருந்தது. அந்த மனுக்கள் மீதான சட்டப்பூர்வமான விசாரணை இன்று (ஜூலை 6, 2018) சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்புக்கான அதிகாரம் பெற்ற அலுவலருமான சுகுமார், நில உரிமையாளர்களிடம் நேரில் கருத்துகளைக் கேட்டறிந்தார். வெள்ளியம்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்¢ளி, சின்னக்கவுண்டாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்தம் 169 பட்டாதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.   விசாரணைக்கு வந்தவர்களிடம் எட்டு வழிச்சாலையால் எத்தனை ஏக்கர் நிலம் பறிபோகிறது?, குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள்? நிலம் கூட்டுப்பட்டாவாக இருக்கிறதா? தனித்தனியாக கிரயம் செய்யப்பட்டுள்ளதா? மகன், மகள்கள் இருந்த
நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

அரசியல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னை - சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது. இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விர