Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Dogs found

பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

பூவனம்: விடியல் உனக்காக! (கவிதை)

இலக்கியம், புத்தகம்
ஸ்ரீலங்காவில் இலக்கிய படைப்பாளிகள் அதிகளவில் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதிலும், இஸ்லாமிய சமூகத்தில் நிறைய பேர் எழுத்தாற்றலுடன் இருப்பதையும் அறிவேன். அவர்களுள் புதிய வரவாக, கவிதை உலகில் நாலு கால் பாய்ச்சலில் களம் இறங்கி இருக்கிறார், நுஸ்கி இக்பால். காத்தான்குடியைச் சேர்ந்தவர். அவருடைய முதல் படைப்பு, 'விடியல் உனக்காக...' கவிதை நூல். இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். கட்டடப் பொறியாளரான நுஸ்கி இக்பால், அடுக்கு மாடி கட்டடத்தின் உப்பரிகையில் நின்று உலகத்தைப் பார்க்காமல், சாமானிய மக்களோடு சாமானியராக பயணப்பட்டே, கவிதைகளை வடித்திருக்கிறார் என்பதை இந்நூலில் உள்ள பல கவிதைகள் உணர்த்துகின்றன. கல்லூரிக்கால நண்பன், பேருந்துப்பயண அனுபவம், நடைபாதைவாசிகளின் துயரம், அகதிகளின் ஓலம், ஒருதலைக்காதல், மதுப்பழக்கத்தின் கொடூரம், உழைக்கும் வர்க்கம் என பாடுபொருள்களாகக் கொண்ட கரு ஒவ்வொன