Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DNA test

கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

கூட்டு வன்புணர்வு… கழுத்தை நெரித்தோம்… சுவர் மீது தலையை மோதினோம்… போதை மருந்து கொடுத்தோம்… எல்லாமே கடவுளின் கண் முன்னே நடந்தது!#Asifa#JusticeForAsifa

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
சிறுமி ஆசிஃபாவை கூட்டு வன்புணர்வு செய்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கு, இந்தியாவை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் பாஜக பிரமுகர், சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆசிஃபா (8). கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி, அந்தப் பகுதியில் இருந்த வனத்திற்குள் குதிரைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றவள் அதன்பின் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தந்தை யூசுப் பூஜ்வாலா, நண்பர்களுடன் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மனதளவில் நொந்து போனார். இரு நாள்கள் கழித்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்றபோது அவரை அலட்சியம் செய்து விரட்டி அடித்ததோடு, வழக்குப் பதிவு செய்யவும் மறுத்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி, காட்டுப்பகுதிக்குள் சிறுமியின் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவளுடைய கை, கால் எலும்புகள் முறிக
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி என்றால் அவருடைய உடலை ஏன் மரபணு சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், மரண சான்றிதழ் வழங்காதது ஏன் என்றும் கேட்டுள்ளதன் மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார், இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். எம்.கே.சிவாஜிலிங்கம். கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிப் போரின்போது, மே 17ம் தேதி, சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் வி டுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிங்கள பேரினவாத அரசு, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக் குண்டுகள் வீசி படுகொலை செய்தது. முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் அவருடைய இறப்பு குறித்து இன்றும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்ல