Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DMK

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

திமுக: 24 கிடா வெட்டி 3000 பேருக்கு பந்தி வைத்த டிஎம்எஸ்! மெகா விருந்தின் மர்மம் என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
என்றைக்கும் இல்லாத திருநாளாக டி.எம்.செல்வகணபதி வைத்த 'மெகா' கிடா விருந்துதான், சேலம் மாவட்ட திமுகவில் இப்போதைக்கு காரசார விவாதப்பொருளாகி இருக்கிறது.   கடந்த பிப்ரவரி 3, 2019ம் தேதி, திமுகவினர் அறிஞர் அண்ணாவின் ஐம்பதாவது ஆண்டு நினைவுதின ஊர்வலம், பேச்சரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்க, அக்கட்சியின் மாநிலத் தேர்தல் பணிக்குழு செயலாளரான டி.எம்.செல்வகணபதியோ, ஏற்காட்டில் ஒரு பெருவிருந்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஏற்காட்டிலிருந்து குப்பனூர் செல்லும் சாலையில் உள்ள சூரக்குடி முனியப்பன் கோயிலில் கிடா வெட்டி வழிபட்டார் டிஎம்எஸ். 'பிப்ரவரி 3ம் தேதியன்று, பெருவிருந்து காத்திருக்கிறது. எல்லோரும் ஏற்காடு ஏரி அருகே உள்ள திலகம் நெஸ்ட் ஹோட்டலுக்கு மதியம் 12 மணிக்கு வந்துவிடுமாறு' ஏற்காடு ஒன்றிய திமுகவினர், கட்சியினருக்கு வாட்ஸ்அப்களில் குறுஞ்செ
திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

திமுகவை திணறடித்த ரூ.1000 டோக்கன்! சொதப்பிய ஊராட்சி சபைக்கூட்டங்கள்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மக்களவை தேர்தலையொட்டி, கடைக்கோடி மக்களையும் சந்திக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. 'மக்களிடம் செல்வோம்; மக்களிடம் சொல்வோம்; மக்கள் மனதை வெல்வோம்' என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் ஜனவரி 9ம் தேதி, ஊராட்சி சபைக் கூட்டங்களை தொடங்கியது திமுக. ஊராட்சி சபைக் கூட்டங்கள் என்பது கிட்டத்தட்ட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தின் இரண்டாம் பாகம்போலதான் இருக்கிறது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அந்தந்த தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்கின்றனர்.   சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் உடல்நலம் குன்றியதால், மக்களவை தேர்தல் பணிகள் வேகமெடுக்காமல் இருந்தன.   கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட உடன்பிறப்புகளும், தேர்தல் பணிகளை மறந்த நிலைய
தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

தலித் வாக்காளர்கள்தான் டார்கெட்! நாமக்கல்லில் திமுக பரபர… அதிமுக கொர்ர்…#ParliamentElection

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பதினாறாவது மக்களவையின் ஆயுள் காலம் 2019, மே மாதத்துடன் முடிவு பெறுகிறது. மார்ச் முதல் வாரத்தில், பதினேழாவது மக்களவை தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாமல் அதிமுகவும், கருணாநிதி இல்லாமல் திமுகவும் சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் இது என்பதால், தமிழக தேர்தல் களம் முன்னெப்போதையும் விட சூட்டைக் கிளப்பும்.   திமுக வேகம் ஆளும் அதிமுகவைக் காட்டிலும் திமுக தரப்பு, மக்களவை தேர்தல் பணிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரொம்பவே வேகம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம், மாவட்டந்தோறும் நிர்வாகிகள் கருத்துக்கேட்பு கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் வரை நடத்தி முடித்துவிட்டது.   தேர்தல் நெருக்கத்தில் மக்களைச் சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது எல்லாம் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறைதான் என
எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார்.     டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   ''கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண
நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

நியாயமாரே…!; இதற்குத்தானா எட்டு வழிச்சாலை?

அரசியல், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு ஜவுளிக்கடை, பால் நிறுவனத்தில் சொற்ப ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக அதிகாரிகள் மூலம் ஆசை வார்த்தை கூறி வருகிறது சேலம் மாவட்ட நிர்வாகம். கொத்தடிமை வேலையில் சேர்வதற்காகவா எங்கள் பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்தோம்? என்று விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னை - சேலம் இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் குறித்த அறிவிப்பு வந்த நாள் முதலே முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.   பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள பசுமைவழி விரைவுச்சாலைக்காக, சேலம் மாவட்டத்தில் 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 36.3 கி.மீ. தூரத்திற்கு சாலை அமைகிறது. இந்த சாலை 70 மீட்டர் அகலத்தில் 8 வழிச்சாலையாக விர
எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பே இல்லையாம்!: எடப்பாடியே சொல்லிட்டாரு!!

எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பே இல்லையாம்!: எடப்பாடியே சொல்லிட்டாரு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நூற்றுக்கு நான்கு அல்லது ஐந்து பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நாமக்கல்லில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வந்திருந்தார். காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையமும், நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகா மட்டும் தங்கள் தரப்பு பிரதிநிதிகளை அறிவிக்காமல் இருந்தது. அதனால் மத்திய அரசாங்கமே, தாமாக முன்வந்து அதற்கான உறுப்பினர்களை நியமித்துள்ளது.
தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

தையா? சித்திரையா?: தமிழ்ப் புத்தாண்டிற்கு தர்க்க ரீதியிலான விளக்கம்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காலங்காலமாக சித்திரை முதல் நாளில், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடி பழக்கப்பட்டு விட்ட தமிழர்களிடம், திடீரென்று அன்றைய நாளில் புத்தாண்டு இல்லை என்று சொன்னால் எப்படி இருக்கும்?. வெகுசன மக்களிடம் அதிர்ச்சியும், குழப்பங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுமல்லவா? அத்தனையும் எழுந்தன முந்தைய திமுக ஆட்சியின் மீது.   புரையோடிப் போன நம்பிக்கை:   கடந்த 2008ல் ஆட்சியில் இருந்த திமுக, 'நித்திரையில் இருக்கும் தமிழா உனக்கு சித்திரை அல்ல புத்தாண்டு' என்று புரட்சிக்கவியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு' என்று ஆணையிட்டது. சரியோ தவறோ... புரையோடிப் போன ஒரு நம்பிக்கையை, அரசாணை வாயிலாக தடுத்து அணை போட்டு விட முடியுமா?. இது ஹர்ஷவர்த்தனர் காலம் இல்லை.     இந்த அரசாணைக்கு முன்பே, திரு.வி.க., தைதான் ஆண்டின் தொடக்கம் என்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலி
தமிழகம்: அணையா நெருப்பு!:  ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

தமிழகம்: அணையா நெருப்பு!: ஒன்றுபட வேண்டிய நேரமிது!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தவறான நீதி வழங்கிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு, காவிரி விவகாரத்தில் பாஜகவின் அநீதிக்கு எதிராகவும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.     இந்திய அளவில் மிகப்பெரும் போராட்டக் களமாக, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈழ இறுதி யுத்த நாள்களில் தொடங்கிய போராட்டம் வெப்பம் குறையாமல் தொடர்கிறது. ஈழத்தமிழர்கள், கூடங்குளம், டாஸ்மாக், நெடுவாசல், விவசாயிகள் தற்கொலை, நியூட்ரினோ, காவிரி என அடுத்தடுத்து உஷ்ணம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது.   இதற்கான பொறி, கண்ணகி விதைத்தது. செங்கோல் முறைமையில் இருந்து வழுவிய பாண்டிய மன்னனுக்கு எதிராக அன்று கண்ணகி பற்ற வைத்த நெருப்பு அணையாமல் தணலாக விசும்பிக் கொண்டே இருக்கிறது.   எங்கெல்லாம் எப்போதெல்லாம் நீதி வழுவுகிறதோ அப்போதெல்லாம் தணல் கனிந்து பெரும் ஜூவா
கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

கமல்ஹாஸனின் இலக்கு யார்? அடுத்த பயணம் எங்கே?

அரசியல், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரம் அது. டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு, அனிதா மரணம் குறித்து கமல்ஹாஸன் ட்விட்டர் பக்கங்களில் ஆளுங்கட்சியை காட்டமாக விமர்சிக்க, பதிலுக்கு ஆளும் தரப்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டது. ''ட்விட்டரில் மட்டும் அரசியல் செய்தால் போதாது. துணிச்சல் இருந்தால் களத்திற்கு வரட்டும்'' என அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் கமல்ஹாஸனை சீண்டிக்கொண்டே இருந்தனர். நேற்றைய தினம், கமல்ஹாஸன் புதிய கட்சியை தொடங்கி, எல்லோரையும் அதிரடித்துவிட்டார். நேற்றைய தினம் கமல்ஹாஸன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்றே சொல்லலாம். காலை 7.45 மணிக்கு துவங்கிய பயணம் இரவு 10 மணிக்குதான் முடிந்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் உள்ள, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீடு, அவருடைய நினைவிடம், சொந்த ஊரான பரமக்குடி விஜயம், பிறகு மதுரை மாநாடு என புயலாகச் சுழன்றடித்துள்ளார். கமல், சினிமாவில் உ
சிங்கம் களம் இறங்கிடுச்சே!;  வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

சிங்கம் களம் இறங்கிடுச்சே!; வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்ற மதிமுக தலைவர் வைகோவை, சமூகவலைத்தளத்தில் கடுமையாக கிண்டல் செய்து 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். பலர் திமுகவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து மதுரையில் நேற்று (பிப்ரவரி 13, 2018) பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக தலைவர் வைகோ, இரண்டு முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். ஒன்று, திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று யார் நினைத்தாலும் அது முடியாது. மற்றொன்று, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதுதான் என் நோக்கம் என்றும் கூறினார். சும்மாவே வைகோவை கேலி, கிண்டல் செய்யும் சமூகவலைத்தள பதிவர்களுக்கு இது போதாதா? இன்று நாள் முழுக்க அவரை கடுமையாக கிண்டல் செய்து எக்கச்சக்கமாக மீம்களை பதிவிட்டுள்ளனர். ஒரு காலத்தில் திமுகவின் மு