Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DMK candidate

மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

மறைமுக தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாளை (11.1.2020) நடைபெற இருக்கும் ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடவடிக்கைகளை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜன. 10,2020) உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி புவனேஸ்வரி (47) திமுக பிரமுகர். அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாப்பட்டி கிராம ஊராட்சி 14வது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், உயர்நீதிமன்றத்தில் கடந்த 8ம் தேதி, மாநில தேர்தல் ஆணையம், சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி, சேலம் மாநகர காவல்துறை ஆணையர், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக ஒரு ர
சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பாமகவை வீழ்த்தி, 22 வயதே ஆன இளம்பெண் அபார வெற்றி பெற்றுள்ளார்.   சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் வீதம் மொத்தம் 20 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலத்தை அடுத்த, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வைஸ்யா கல்லூரியில் எண்ணப்பட்டன. அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மோகன் மனைவி பிரீத்தி என்பவர் திமுக சார்பில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்டார். பிரீத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 22 வயதே
சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

சேலம் மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மனுத்தாக்கல்; ரூ.6 கோடிக்கு சொத்து கணக்கு!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) வேட்புமனு தாக்கல் செய்தார். அவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் ரூ.6 கோடி சொத்துகள் இருப்பதாக கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.   மக்களவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பரப்புரையை தொடங்கியுள்ளன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் பரவலாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன், வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) மதியம், சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரோகிணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தேர்தல் பொறுப்பாளர் கந்தசாமி, காங்கிர