Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: died

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த் காலமானார்!

சினிமா, முக்கிய செய்திகள்
19.3.1940 - 12.10.2021   பழம்பெரும் நடிகரும், ஜெயலலிதாவுக்கு முதன்முதலில் கதாநாயகனாகவும் நடித்த ஸ்ரீகாந்த் (81), செவ்வாய்க்கிழமை (அக். 12) சென்னையில் காலமானார். வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். பிரபல இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை (1965) படத்தில் ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் அறிமுகமானார்கள். அந்தப் படத்தில் ஜெயலலிதாவுக்கு கதாநாயகனாக நடித்திருந்தார், ஸ்ரீகாந்த்.   அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கிய பாமா விஜயம், பூவா தலையா, எதிர் நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, எதிர் நீச்சல் படத்தில் கிட்டு என்ற பாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.   தமிழில்
காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர
கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்

கொடுங்கையூர் சம்பவம்: கமல் கடும் கண்டனம்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில் மின் இணைப்புப் பெட்டியில் இருந்து அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் இன்று (நவம்பர் 1, 2017) மதியம் இரண்டு சிறுமிகள் பரிதாபமாக இறந்தனர். மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே இந்த துயரம் நிகழ்வு நடந்துள்ளது. பணியில் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் உள்பட மொத்தம் 8 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இந்நிலையில் கொடுங்கையூர் நிகழ்வு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தனது பதிவில், "கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவன செய்ய வேணடும்" என்று
கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது. இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவ