Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: depression

”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

”புகைப்பிடித்தால் மட்டுமல்ல தூங்காவிட்டாலும் மரணம் வரும்!”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, மருத்துவம், முக்கிய செய்திகள்
உலக அளவில், இந்தியாவில்தான் இருதய நோயாளிகள் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு. அதாவது, 2015ம் ஆண்டின் கணக்கீட்டின்படி, நம் நாட்டில் 62 மில்லியன் இருதய நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 45 வயதுக்கும் குறைவானவர்கள் மாரடைப்பால் இறப்பது அதிகரித்து உள்ளதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. போதாக்குறைக்கு உலக சுகாதார நிறுவனமும், 2030ம் ஆண்டுவாக்கில் உலகம் முழுவதும் வருடத்திற்கு 23 மில்லியன் பேர் இருதய நோய்களால் இறக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. ''நமக்கெல்லாம் இருதய நோய்க்கான காரணம் என்னவென்று தெளிவாக தெரியும். அதை தடுப்பதற்கான வேலைகளில்தான் கவனம் செலுத்துவதில்லை. இரவு நேரத்தில் சரியாக தூங்காவிட்டால்கூட இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை,'' என்கிறார், மருத்துவர் ஜோதி ஆனந்த். சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்!

அரியலூர், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக ஒரு மாணவர், உயிரை மாய்த்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிளஸ்-2வில் 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தற்கொலையில் வீழ்வது அனிதா மட்டுமே அல்ல; இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதோ ஒரு மூலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கை (2015). கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 8934 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த அறிக்கை. அதற்கு முந்தை