Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Dengue mosquito

இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

இதற்காகத்தான் சேலம் மாநகராட்சிக்கு விருது! சும்மா ஒண்ணும் தரல!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிறந்த மாநகராட்சிக்கான விருதுக்கு இந்த முறை சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், அதற்கான தகுதிகள் இருக்கின்றனவா என்பதை கூர்ந்தாய்வு செய்தால், கேள்விகளே மிஞ்சும். எங்கு பார்த்தாலும் சுகாதாரச் சீர்கேடு, பொதுக்கழிப்பறை இருந்தால் தண்ணீர் இருக்காது, தூய்மை இந்தியா திட்டத்தைப் போற்றுவோம்... ஆனால் திறந்தவெளி மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாட்டோம். திடக்கழிவு மேலாண்மைப் பற்றி பேசுவோம்... ஆனால், செட்டிச்சாவடி குப்பைக்கிடங்கை மூடுவோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இப்படித்தான் இருக்கு சேலம் மாநகராட்சி நிர்வாகம். இதற்குதான், அவார்டெல்லாம் கொடுக்கிறார்கள்.   ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகவெல்லாம் குறை சொல்லவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் கணக்கில், நாம் மணியனூரில் உள்ள ஆட்டிறைச்சிக் கூடத்தை நேரில் பார்வையிட்டோ
டெங்கு அலட்சியம்:  சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை