Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: democracy

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு
தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.   'அம்மையார் இந்திரா காலில் விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?' என்று தலைப்பிட்டு ஒரு காணொலி பரவி வருகிறது. அந்தக் காணொலியில், வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார். பிறகு அந்தப் பெண்மணியின் காலைத் தொட்டு வணங்குகிறார். அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர். காணொலி, மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது. அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது, அவர் இந்திராகாந்திதான் என்ற முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு வருவது அபத்த
தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் (63), நாடறிந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் சாந்தி பூஷணின் மகன்களுள் ஒருவரும்கூட. பொதுநல வழக்குகளில் எப்போதும் ஆர்வம் செலுத்தி வரும் பிரசாந்த் பூஷண், மனதில் பட்டதை அப்பட்டமாகப் பேசிவிடக் கூடியவர். அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பற்றி, கடந்த ஜூன் 27, 2020ல் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் வரவரராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிபதிகள் அதைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.
மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

மேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜகவின் அதிகாரப் பசி, ஜனநாயகத்தை தொடர்ந்து கேலிக்கூத்தாக்கி வருவது, தேர்தல் அரசியல் மீதான நம்பகத்தன்மையை வெகுசன மக்களிடையே நீர்த்துப் போகச் செய்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டன. திரிபுராவில் மட்டும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சி 35 தொகுதிகளில் வென்று இருந்தது. ஆனால் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி 18 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றது. இக்கட்சிகளுக்கு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும், சுயேட்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரவு வழங்க, 32 எம்எல்ஏக்களுடன் தேசியவாத ஜனநாயக முற்ப
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!!

இந்தியா, முக்கிய செய்திகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே சக நீதிபதிகள் இன்று (ஜனவரி 12, 2018) புகார் கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நிர்வாகம் குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று காலை கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பாக, நீதிபதிகள் குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி கொடுத்தது கிடையாது என்பதால், தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பானது. நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு
வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

வதந்தி பரப்பும் ஊடகங்கள்; நெட்டிஸன்கள் பொளேர்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வெறுமனே பரபரப்புக்காக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் பின்னணியில் அபரிமிதமான லாப வேட்கையும், மனித உணர்வுகளை அலட்சியப்படுத்துவதில் அசட்டுத்தனமான துணிச்சலுமே மலிந்திருக்கிறது என்பதைத்தான் ஊடகங்களின் அண்மைக்கால போக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஊடகம் (மீடியா) என்ற சொல்லே பொதுப்பெயர்தான். இதனுள் அச்சு, காட்சி ஊடகங்கள்¢ இரண்டும் அடங்கும். பொதுவெளியை விடுவோம்; ஊடகத்தில் இருக்கும் பல நண்பர்கள் இன்னும் 'மீடியா' என்றால் காட்சி ஊடகம் என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள். கோச்சிங் அளிப்பவரை 'கோச்சர்' என்பதுபோல. இப்படிச் சொன்ன பிறகு, இந்தக் கட்டுரை எழுதியதற்காக என் சமகால நண்பர்கள் என்னையும் பகடி செய்யக்கூடும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்ற புரிதலோடுதான் எழுதுகிறேன். அச்சு ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலங்களில் அவற்றினூடாக வதந்திகள் பரவியதில்லையா எனக் கேட்கலாம்.