Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: dead

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கச்சென்ற தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, உடன் சென்ற மற்றொரு ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டுக்கொன்றார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதை சென்னை மாகர காவல்துறை அவசர அவசரமாக மறுத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கொளத்தூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாதுராம் மற்றும் கூட்டாளிகளைத் தேடி ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கடந்த 13ம் தேதி, நாதுராம் கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்
நெல்லை சம்பவம்: கந்துவட்டியால் தீக்குளித்த நான்காவது நபரும் பலி; குடும்பமே மடிந்தது

நெல்லை சம்பவம்: கந்துவட்டியால் தீக்குளித்த நான்காவது நபரும் பலி; குடும்பமே மடிந்தது

தமிழ்நாடு, திருநெல்வேலி, திருப்பூர், முக்கிய செய்திகள்
  கந்துவட்டி கொடுமையால் கடந்த 23ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவத்தில் எஞ்சியிருந்த நான்காவது நபரும் இன்று (அக். 25, 2017) பலியானார். திருநெல்வேலி மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தார். அசல், வட்டி திருப்பிச் செலுத்தியும், தொடர்ந்து பணம் கேட்டு கடன்காரர்கள் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. விரக்தி அடைந்த இசக்கிமுத்து, தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 23ம் தேதியன்று காலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் அவரை அருகில் இருந்த பொதுமக்கள், போலீசார் மற்றும் ஊடகத்தினர் பத்திரமாக மீட்டு பாளையம்கோட்டை அரசு மருத்துவமனைய
வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்.18ம் தேதி காவல்துறை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டை முடிந்து கடந்த 2017, 18ம் தேதியுடன் 13 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை, 'பட்டுக்கூடு ஆபரேஷன்' (Operation Cocoon) மூலம் வேட்டையாடிய அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார், 'வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்' (Veerappan - Chasing the Brigand) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் வீரப்பன் ஏன் வேட்டையாடப்பட்டார், கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார், அமைச்சர் நாகப்பா ஆகியோரை வீரப்பன் கடத்தியது ஏன் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.   காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கே.விஜயகுமார், நடுவண் பாதுகா