Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: corruption scandal

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப, பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் தொடங்கிய ஊழல் முறைகேடுகள், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தொடர்கிறது. இதனால், 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.   முட்டுக்கட்டை:   முன்னத்தி ஏர்போல, முன்மாதிரி சமூகமாக விளங்க வேண்டிய சேலம் பெரியார் பல்கலைக்கழகமே, ஊழல் புரையோடிக் கிடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் சிண்டிகேட் அமைத்து ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் சுருட்டினர்.   ஊழல் குட்டுகள் வெளிப்படத் தொடங்கிய பின்னர், ஒருவரை ஒருவர் காலை வாரிவிடத் தயாரானபோதுதான், அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளின் விளைவாக, இப்போதும் பல உதவி, இணை பேராசிரியர்கள் பதவ
ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊடகங்களை பேச விடுங்கய்யா….!: உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியா, முக்கிய செய்திகள்
ஊழல் முறைகேடு பற்றிய செய்தியில் சிறு சிறு தவறுகள் அல்லது அதை வெளியிடுவதில் அதீத ஆர்வம் இருப்பதை எல்லாம் அவதூறாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 9, 2018) கருத்து தெரிவித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல் என்பது இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் வியாபித்து இருக்கிறது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக்குழு ஆய்வின்படி, 1992 முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 1252 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. பத்திரிகையாளனின் பேனா முள் தலை சாய்ந்திருக்கும் வரை ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ கண்டுகொள்வதில்லை. அதே பேனா முள் அவர்களை நோக்கி நீளும் ஆயுதமாக மாறும்போதுதான் ஊடகத்தின் மீதோ அல்லது அதை எழுதியவர் மீதோ தாக்குதல் தொடுக்க தொடங்கி விடுகின்றனர். ஆளும் வர்க்கம், அவதூறு வழக்கு என்ற பெயரில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு முடக்கும் வேலைக