Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: corporate

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

வேலைக்காரன் – சினிமா விமர்சனம்; ‘கார்ப்பரேட்டுகளின் லாப வெறியை தோலுரிக்கிறது’

சினிமா, முக்கிய செய்திகள்
'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில், உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 22, 2017) வெளியாகி இருக்கிறது, 'வேலைக்காரன்'. நடிகர்கள்: சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகிணி, சார்லி, விஜய் வசந்த், 'ரோபோ' சங்கர், சதீஷ், 'மைம்' கோபி, 'ஆர்.ஜே.' பாலாஜி, தம்பி ராமையா, சரத் லோஹித்ஸ்வா மற்றும் பலர். இசை; அனிருத்; ஒளிப்பதிவு: ராம்ஜி; கலை: முத்துராஜ்; தயாரிப்பு: 24 ஏஎம் ஸ்டூடியோஸ்; இயக்கம்: மோகன் ராஜா. கதை என்ன?: வேலைக்காரர்கள், அந்தந்த நிறுவனத்தின் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதைக் காட்டிலும், பொருள்களை வாங்கும் நுகர்வோருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், லாபவெறி கொண்டு அலையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்ணும் உணவுப்பொருள்களை எப்படி தயாரிக்கின்றன? அதை வணிகப்படுத்த என்னவெல்லாம் செய்கின்றன என்பதையும் நேர்த்தியான திரை க்கதையுடன
அறம் – சினிமா விமர்சனம்;  ‘துகிலுறியப்படும்  அதிகாரவர்க்கம்!’

அறம் – சினிமா விமர்சனம்; ‘துகிலுறியப்படும் அதிகாரவர்க்கம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில் எப்போதேனும் மிக அரிதான தருணங்களில் மட்டுமே குரலற்றவர்களின் குரலை, எந்த வித சமரசமுமின்றி திரைப்படமாக எடுக்கப்படுவதுண்டு. 'தண்ணீர் தண்ணீர்', 'ஜோக்கர்' போன்ற படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வகைமையிலான படம்தான், அறம். இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு வேறொன்றைச் சூட்டிவிட முடியாது. அண்மைக் காலங்களாக நயன்தாரா, நாயகி பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் பாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருடைய ஒட்டுமொத்த சினிமா கேரியரில் இந்தப்படம் மறக்க முடியாததாக இருக்கும். நயன்தாராவைத் தவிர ஆட்சியர் பாத்திரத்திற்கு வேறு நாயகிகள் பொருந்துவார்களா என்பதும் கேள்விக்குறிதான். ஆட்சியருக்கான மிடுக்கு, கோபம், ஒடுக்கப்பட்டவர்கள் மீதான பரிவு என நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார். அவருடைய உடல்மொழி ரொம்பவே ரசிக்க வைக்கிறது. படம் முழுக்க அவருக்கு இரண்டே இரண்டு புடவைகளில்தான் வருக
நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல