Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: cooperative bank

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

நாளை நடக்க இருந்த கூட்டுறவு உதவியாளர் தேர்வு தள்ளிவைப்பு!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலத்தில், நாளை (நவ. 23) நடக்க இருந்த கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள இதர கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு நாளை (நவ. 23ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (நவ. 24) போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதோடு, இதற்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்டு வந்தது.   இந்நிலையில், உயர்நீதிமன்ற ஆணையின்படி நவ. 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள் ) நடக்க இருந்த
சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!

சேலம், தகவல், தமிழ்நாடு
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு அமைப்புகளில் காலியாக உள்ள உதவியாளர் பதவிக்கான போட்டித்தேர்வு நவ.23, 24 ஆகிய நாள்களில் நடக்கிறது.   சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் அதன் கிளைகளில் காலியாக உள்ள 89 உதவியாளர் பணியிடங்கள், போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு, கடந்த 28.8.2019ம் தேதி (அறிவிக்கை எண்: 02/2019) வெளியிடப்பட்டது. அதேபோல், மத்திய கூட்டுறவு வங்கி தவிர இதர நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் பணியிடங்களும் மேற்சொன்ன தேர்வு முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பும் மேற்கண்ட தேதியில் (அறிவிக்கை எண்: 01/2019) வெளியிடப்பட்டது. இனசுழற்சி உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி இப்பணியிடங
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாக உயரும் என்று அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அசோசெம் அறிக்கையில் மேலே சொல்லப்பட்ட ஒரு வரி தகவல்தான், புதிய செய்தி. அதற்கு முன்பாக செயல்படாத சொத்துக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வாராக்கடன் (Bad Debt) மற்றும் வாரா அய்யக்கடன் (Bad and Doubtful Debt) என்ற சொற்கள் எல்லாம் கணக்குப்பதிவியலை ஒரு பாடமாக படித்தவர்கள் நன்கு அறிவர். அந்த வாராக்கடன் சொல்லுக்குதான் புதிய மூலாம் பூசி, 'செயல்படாத சொத்துக்கள்' (NPA - Non Performing Asset) என்கின்றனர். இந்த புதிய சொல்லாடல் எல்லாமே 1991க்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, உலகமயம் கொள்கையை கையில் எடுத்த பிறகு. அப்போது இருந்துதான் தாராளமயம், தனியார்மய கொள்கைகளும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.