Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: classist

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சாதிய வர்க்கவாதிகளின் எலும்பை முறிக்கும் அசுரன்! சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுமைக்கும் வர்க்க முரண் என்பது, இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையிலான வேறுபாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்திய பெருநிலத்தைப் பொருத்தவரை வர்க்கப்பிரிவினை என்பதில் சாதிய பாகுபாடும் உள்ளடங்கும். அதிலும் தமிழ்நாடு போன்ற ஆதிகுடிகளின் மண்ணில், வர்க்கப்பிரிவினை என்பது கண்டிப்பாக சாதியத்தையும் இணைத்தே வந்திருக்கின்றன. இப்போதும் இருக்கின்றன. வல்லான் வகுத்ததே நீதி என்ற சூழலில், வலுத்தவர்களிடம் இருந்து எளியவர்கள் எப்படி எல்லாம் தப்பிப்பிழைக்க போராட வேண்டியதிருக்கிறது என்பதை குருதி தெறிக்க பேசி இருக்கிறது, அசுரன். இயக்குநர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் அக்.4ல் வெளியாகி இருக்கும் அசுரன் திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்கள் இருத்தலுக்காக கைகொள்ளும் போராட்டங்களை விவரிக்கிறது. படத்தின் மூலக்கதை, பூமணி எழுதிய 'வெக்கை' நாவல்தான் என்பதாலோ என்னவோ படம் முடியும் வரை பார்வையாளர்களின் உடலுக்குள்ள