Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Chief Minister Edappadi Palanisamy

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சேலம்: எடப்பாடி வீடு அருகே உருவான ‘மினி கூவம்!’; நாறும் மாம்பழ நகரம்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் போடிநாயக்கன்பட்டி ஏரி, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதோடு, இறைச்சிக் கழிவுகளால் நிரம்பி இன்னொரு கூவமாக உருமாறி வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற சில நாள்களில் நடந்த அனைத்துத்துறை ஆய்வு க்கூட்டத்தில், ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக, கடந்த நிதியாண்டில் மட்டும் 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1519 பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்றும் அப்போது கூறினார். குடிமராமத்துப் பணிகள் என்பது, நிலத்தடி நீரை செறிவூட்ட ஆகச்சிறந்த வழிமுறை என்பதால், துவக்க நிலையில் இத்திட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலேயே பல ஏரிகள்
ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

ஆளுநர் நாளை தமிழகம் வருகிறார்

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்துள்ள நிலையில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நாளை (26/8/17) தமிழகம் வருகிறார். இதற்கிடையே, புதுச்சேரியில் ரிசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் நாளை ஆளுநரை நேரில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தினகரன் அணியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த கொறடா ராஜேந்திரன், பேரவைத் தலைவர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் வருவது, தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிகிறது.